Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 6 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நேர்ச்சை செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். நோர்ச்சையானது (அல்லாஹ் விதித்தவை தவிர) எந்த நன்மையையும் கொண்டு வரமாட்டாது. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை).
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'அயலவரும் வாரிசுதாரராக ஆகி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அயலவர் -அண்டைவீட்டார் குறித்து எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளியை வைத்துக் கொண்டிருக்கும் யாராக இருப்பினும், அதில் நிறைவேற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றா விட்டால், நெருப்பினால் ஆன இரும்புப் பாளங்கள் அவருக்காக உருவாக்கப்பட்டு, அவை நரக நெருப்பில் சூடு காட்டப்படும். பின்பு, அதைக் கொண்டு அவரது விலாப்புறத்திலும், நெற்றியிலும், முதுகிலும் சூடு போடப்படும். சூடு தனியும் போதெல்லாம் மீண்டும் சூடு போடப்படும். ஐம்பதாயிரம் வருட அளவைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும், அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கப்படும் வரை இவ்வாறு செய்யப்படும். அதன் பின்னர் தான், தனது பாதை ஒன்றில் சுவர்க்கம் என்றோ, நரகம் என்றோ கண்டுகொள்வார்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
"உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீத்தம் பழத்திற்குப் பேரீத்தம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ் நாடிய நேரம்வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு சில ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் மூன்று ஒட்டக மந்தைகளை எங்களுக்கு வழங்கும்படி ஆணையிட்டார்கள். (அவற்றில் ஏறி) நாங்கள் சென்றபோது, எங்களில் சிலர் சிலரிடம், நபி ஸல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நம்மைச் சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றியனுப்பத் தம்மால் இயலாது என நபியவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு, நாம் ஏறிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில் நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாதே! என்று கூறினார்கள். ஆகவே, நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (திரும்பவும்) சென்று, அவர்களுக்கு அதை நினைவு படுத்தினோம். அப்போது அவர்கள், 'நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை; மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனிமேல் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும் பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்து விடுவேன்' என்று சொன்னார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ள மாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ள மாட்டான் என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அவன் யார்? அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கேட்கப்பட்ட போது, 'எவனுடைய தீமைகளை விட்டும் அண்டைவீட்டான் அபயம் பெற வில்லையோ அவன் தான்' என்று கூறினார்கள்.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்