Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 3 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
அவர்கள் ஒரு தடவை ஹஜருல் அஸ்வதிடம் வந்து, அதனை முத்தமிட்டுவிட்டு இவ்வாறு கூறினார்கள் : நீ, பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற ஒரு கல் மாத்திரமே என்பதை நான் அறிவேன். நபியவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிருக்காவிட்டால், நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
(ஒரு முறை) நபி(ஸல்லல்லலஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸாபித் இப்னு கைஸ்(ரழி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் அவரைப் பற்றிய செய்தியை அறிந்து கொண்டு தங்களிடம் வருகிறேன். என்று சொல்லிவிட்டு ஸாபித் இப்னு கைஸ்(ரழி) அவர்களிடம் சென்றார். ஸாபித் இப்னு கைஸ்(ரழி) தம் வீட்டில் தலையைக் (கவலையுடன்) கவிழ்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டார். 'உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று அவரிடம் கேட்டதற்கு அவர், '(பெரும்) தீங்கு ஒன்று நேர்ந்துவிட்டது. நான் நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குரலை விட என்னுடைய குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். எனவே, என் நற்செயல்கள் வீணாகி விட்டன. நான் நரகவாசிகளில் ஒருவனாகி விட்டேன்' என்று பதிலளித்தார். உடனே, அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் இப்படியெல்லாம் கூறினார் என்று தெரிவித்தார். அடுத்த முறை அந்த மனிதர் (பின்வரும்) மாபெரும் நற்செய்தியுடன் திரும்பிச் சென்றார். (அதாவது அம்மனிதரிடம்) நபி(ஸல்) அவர்கள் 'நீ ஸாபித் இப்னு கைஸிடம் சென்று, 'நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்லர்; மாறாக, சொர்க்க வாசிகளில் ஒருவரே' என்று சொல் என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உங்களில் சிறந்தவர்கள் எனது காலகட்டத்தைச் சேர்ந்தவர்களே! பின்பு அவர்களை அடுத்து வருபவர்கள், பின்பு அவர்களை அடுத்து வருபவர்கள். இம்ரான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்னர் இரு தலைமுறையினரையா அல்லது மூன்று தலைமுறையினரையா கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டடேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களுக்குப் பின்னர் சில மக்கள் வருவார்கள். அவர்கள் துரோகம் செய்வார்கள். நம்பப்படமாட்டார்கள். சாட்சியம் அளிப்பார்கள். ஆனால், சாட்சியம் அளிக்க அழைக்கப்பட மாட்டார்கள். நேர்ச்சை வைப்பார்கள். ஆனால், நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடம் கொழுப்பு வெளிப்படும்."
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.