Skip to content

'பஜ்ர் மற்றும் இஷா ஆகிய இரண்டு தொழுகைகளும் நயவஞ்சகனுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். அவை இரண்டிற்கும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களேயானால் தவழ்ந்தாவது வந்து விடுவார்கள்.

உபை இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டு அறிவிக்கப் படுகிறது :

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எமக்கு ஸுப்ஹ் தொழுவித்ததுவிட்டு 'இன்னார் தொழுகைக்கு வந்துள்ளாரா? என்று கேட்டார்கள் அப்போது ஸஹாபாக்கள் இல்லை என்று கூற, மீண்டும் 'இன்னார் வந்துள்ளாரா? என்று விசாரித்தார்கள். அதற்கும் ஸஹாபாக்கள் இல்லை என்று கூறவே "'பஜ்ர் மற்றும் இஷா ஆகிய இரண்டு தொழுகைகளும் நயவஞ்சகனுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். அவை இரண்டிற்கும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களேயானால் தவழ்ந்தாவது வந்து விடுவார்கள்.தொழுகையின் முன் வரிசை மலக்குமார்களின் வரிசையைப்போன்றதாகும். இதன் சிறப்பை அவர்கள் அறிவார்காளானால் விரைந்து வருவார்கள். ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து தொழுவது தனித்து தொழுவதைவிடவும் மிகவும் சிறப்பானது. ஒருவர் இரண்டு நபரகளுடன் கூட்டாக தொழுவது ஒருவருடன் கூட்டாகத் தொழுவதைவிட சிறப்புக்குரியது. கூட்டுத் தொழுகையில் எவ்வளவு அதிகமாக மக்கள் கலந்து கொள்கிறார்களோ அது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது.

صلَّى بنا رسولُ الله صلى الله عليه وسلم يومًا الصُّبحَ فقال: «أشاهِد فُلان؟» قالوا: لا، قال: «أشاهِدٌ فُلان؟» قالوا: لا، قال: «إنَّ هاتيَنِ الصَّلاتين أثقَلُ الصَّلَواتِ على المُنافقين، ولو تعلمون ما فيهما لأتيتُمُوهما ولو حَبْوًا على الرُّكب، وإن الصفَّ الأوّلَ على مِثلِ صَفِّ الملائكة، ولو عَلِمتُم ما فضيلتُه لابتَدَرتُموهُ، وإنّ صلاةَ الرجل مع الرجل أزكى من صلاتِه وحدَه، وصلاتَه مع الرجلَين أزكى من صلاتِه مع الرجل، وما كَثُرَ فهو أحبُّ إلى الله تعالى».

இமாம்களான அபூ தாவுத், நஸாஈ, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
சரியானது
விளக்கவுரை

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுப்ஹ் தொழுவித்து விட்டு 'இன்னார் எமது இந்தத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளாரா? என்று விசாரித்தார்கள். அதற்கு ஸஹாபாக்கள் இல்லை என்று கூறினார்கள். பின்னர் இன்னொருவரைக் குறித்தும் அவர் வந்துள்ளாரா? என்று கேட்டார்கள். அதற்கும் ஸஹாபாக்கள் இல்லை என்று பதில் கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : சந்தேகத்திற்கு இடமின்றி, பஜ்ர் மற்றும் இஷா தொழுகைகள் நயவஞ்சகர்களுக்கு மிகவும் கடினமானவை, ஏனெனில் இந்த இரண்டு நேரங்களிலும் சோம்பேறித்தனம் மேலோங்கி நிற்கிறது, மேலும் இருள் காரணமாக யாரும் பார்க்க முடியாததால் நயவஞ்சகத்திற்கான –முகஸ்துதிக்கான- வாய்ப்பு குறைகிறது. முஃமின்களே! ஸுப்ஹ் மற்றும் இஷா தொழுகைகளுக்கு எவ்வளவு கூடுதல் வெகுமதியும் கூலியும் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருந்தால், (ஏனென்றால் முயற்சியின் அளவைப் பொறுத்து கூலியின் -நன்மை- அதிகரிக்கப்படுகிறது), நீங்கள் இந்த இரண்டு தொழுகைகளிலும் தவழ்ந்து வந்தாவது கலந்து கொள்வீர்கள் . உண்மையில், இமாமுக்கு அருகில் முதல் வரிசையில் இருப்பது அல்லாஹ்வுக்கு பக்கத்தில் மலக்குகள் இருக்கும் வரிசையைப் போன்றது. முஃமின்கள் முதல் வரிசையின் சிறப்பு என்ன என்பதை அறிவார்களாயின் உண்மையில் அவர்கள் போட்டி போட்டுக் கொள்வார்கள். ஒருவர் தனியாகத் தொழுவதை விட, மற்றொரு நபருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழுவது அதிகம் நன்மையை பெற்றுத்தரக்கூடியது. மேலும் ஒருவர் தனியாகத் தொழுவதை விட, இருவருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழுவது மிகவும் சிறந்தது. தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் தொழுகை அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதும் சிறந்ததுமாகும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

மஸ்ஜிதின் இமாம், மஃமூம்களின் நிலைமைகளை கண்டறிவதும், இல்லாதவர்களைப் பற்றி விசாரிப்பதும் ஷரீஆ அனுமதிக்கும் ஒரு விடயமாகும்.

ஜமாஅத் (கூட்டுத்) தொழுகையை பேணிவருதல் குறிப்பாக இஷா மற்றும் ஃபஜ்ர் தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவது ஈமானின் அடையாளமாகும்.

இஷா மற்றும் ஃபஜ்ர் தொழுகைகளின் மகத்தான கூலி பற்றி இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றமை, ஏனெனில் இந்த தொழுகைகளில் கலந்துகொள்வது உளப்போராட்டம் மற்றும் வணக்கத்தில் ஏற்படுகின்ற சிரமத்தை பொறுத்துக்கொள்வது போன்ற விடயங்களுடன் தொடர்பானது. எனவே இந்த தொழுகைகளுக்கான வெகுமதி மற்ற தொழுகைகளுக்கான வெகுமதியை விட பிரமாண்டமானது.

கூட்டுத் தொழுகைகள் (ஜமாஅத் தொழுகை) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களைக் கொண்டு நிறைவேறும்.

முதல் வரிசையின் சிறப்பும் பற்றி விபரமும் அதற்காக விரைந்து செல்ல வேண்டும் எனவும் ஆர்வமூட்டுதல்.

இந்த ஹதீஸ் ஒரு கூட்டத்தில் அதிக எண்ணிக்கையினர் இருப்பதன் சிறப்பை உறுதிப்படுத்துகிறது, ஏனெனில் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் எண்ணிக்கையினர் அதிகரிக்கும் போது கூலியும் அதிகரிக்கிறது.

இஸ்லாமிய மார்க்கத்தின் தரப்படுத்தல் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிறப்பில் நல்ல காரியங்கள் வேறுபடுகின்றன.

மேற்கோள்கள்

ஸுனன் அபூ தாவூத் (1/ 415) (554).

ஸுனன் அந்நஸாஈ (2/ 104) (843).

முஸ்னத் அஹ்மத் (35/ 188) (21265).

மேலதிகமாக (8)

شرح الطيبي على مشكاة المصابيح.

لشرف الدين الطيبي (4/ 1132).

مرقاة المفاتيح شرح مشكاة المصابيح.

لعلي القاري (3/ 838).

سبل السلام شرح بلوغ المرام.

للصنعاني (1/ 360 ).

شرح سنن أبي داود.

لعبد المحسن العباد (40/ 11).